சுடச்சுட

    

    நீக்கப்பட்ட ஊழியர்களை பணியமர்த்தினால்தான் சட்டப்பேரவைக்கு வருவோம்: என்.ஆர்.காங்கிரஸ்

    By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசின் பல்வேறு துறைகளில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தினால்தான் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்போம்
    என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    மாநிலத்தின் 14-ஆவது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர், கடந்த  மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. 
    பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநர் உரையின் போதும், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மட்டுமே  பங்கேற்றனர். 
    ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி, மாநில பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். 
    அப்போது பேரவைக்கு வந்த என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  பட்ஜெட்டை புறக்கணித்தும், பணியிலிருந்து நீக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி
    வழங்கக்கோரியும் கட்சியின் தலைவரும், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தலைமையில், பேரவையிலிருந்து  வெளிநடப்பு  செய்தனர்.
    அதற்குப் பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகளை என்.ஆர். காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து  புறக்கணித்து வந்தது.
    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக  பேரவைத் தலைவர் வைத்தியலிங்கம் பேரவையில் பேசியபோது, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவை நிகழ்வுகளை புறக்கணிக்காமல் கலந்துகொண்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று  அழைப்பு விடுத்திருந்தார்.
    இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜெயபால் பேரவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பாதவது: அரசு மற்றும்  அரசுத் துறை  நிறுவனங்களிலிருந்து  பணிநீக்கம் செய்யப்பட்ட   3000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தினால் மட்டுமே சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்போம் என்றும் அதுவரை பேரவை நிகழ்வுகளை வழக்கம்போல் புறக்கணிப்போம் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.
    இதே கோரிக்கையை  வலியுறுத்தி வரும் புதன்கிழமை சுதேசி மில் அருகே எதிர்க்கட்சி தலைவர்  ரங்கசாமி  தலைமையில் 3000-க்கும் மேற்பட்ட பணி
    நீக்கம்  செய்யப்பட்ட  ஊழியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி மாபெரும்  உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai