சுடச்சுட

  

  புதுவையில் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

  By புதுச்சேரி  |   Published on : 06th September 2016 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரியில் 300 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
  புதுச்சேரி மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  இதில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், விழா பேரவைத் தலைவர் குமரகுரு, துணைத் தலைவர் மீனாட்சி தேவி பவனானி, பொதுச்செயலாளர் சனில்குமார்
  உள்பட பலர் பங்கேற்றனர்.
  அங்காளன்குப்பத்தில் 18 அடி விநாயகர் சிலையும், பெரியார் நகரில் 12 அடி உயரத்தில் மூன்றுமுக விநாயகர் சிலையும், வைத்திக்குப்பத்தில் 10 அடி உயரத்தில் சிங்க விநாயகர் சிலையும், உழவர்கரையில் 10 அடி உயரத்தில் மூஷிக விநாயகர் சிலையும், திடீர் நகரில் 8 அடி உயரத்தில் கற்பக விநாயகர் சிலையும் வைத்து பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  பிருந்தாவனம், பாகூர், சின்னஆராய்ச்சிக்குப்பம், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, தந்திராயன்குப்பம், வேல்ராம்பேட், சுதானா நகர், அரியாங்குப்பம், தவளக்குப்பம், ஐயங்குட்டிபாளையம், மேட்டுப்பாளையம், பத்துக்கண்ணு, காட்டேரிக்குப்பம் உள்பட புதுவை முழுவதும் 250 இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்ய விநாயகர் சதுர்த்தி பேரவை குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  இந்து மக்கள் கட்சி: இந்து மக்கள் கட்சி சார்பில், புதுச்சேரி நகர்ப் பகுதியில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
  குறிப்பாக, சாமிப்பிள்ளைத்தோட்டம் லெனின் நகரில் 21 அடியில் பிரமாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
  மேலும், புதுச்சேரியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடங்கள், மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் குடியிருப்புப் பகுதி நலச் சங்கங்கள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்படவுள்ளது. 
  விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதம் ஏதும் நேராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு
  போடப்பட்டுள்ளது.
  விநாயகர் சிலை ஊர்வலம்: வருகிற 9-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு புதுவையின் பல பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே கொண்டு வரப்பட்டு கடலில் 
  கரைக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai