சுடச்சுட

  

  புதுவை மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து வழிபாடு

  By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமிக்கு திங்கள்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
  கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
  தொடர்ந்து, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  உற்சவர் தர்பார் அலங்காரத்தில் காட்சி அளித்தார். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர்.
  முதல்வர் நாராயணசாமி வழிபாடு: மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் வி.நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அவர் பிரசாதம் வழங்கினார்.
  இதேபோல் முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோயில், சித்தி விநாயகர் கோயில், அண்ணாசாலை மண் பிள்ளையார், உழந்தைகீரப்பாளையம் பொதுப்பிள்ளையார் கோயில், நைனார்மண்டபம் செல்வவிநாயகர் கோயில் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
  விநாயகர் கோயில்களில் திங்கள்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
  அலைமோதிய கூட்டம்: சதுர்த்தி விழாவையொட்டி நேரு வீதி, அண்ணாசாலை, காந்தி வீதி, முதலியார்ப்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, வில்லியனூர் மார்க்கெட் பகுதிகள், லாஸ்பேட்டை உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள், பூஜை பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
  பல்வேறு வடிவங்களிலான விநாயகர் மண் சிலைகளைப் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்து வாங்கிச் சென்றனர்.
  பொரி, கடலை, அவல், பழங்கள், பூ, அலங்காரக் குடைகள் உள்ளிட்டவைகளையும் வாங்கிச் சென்று தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்தனர்.
  புதுச்சேரி நகரெங்கும் ஏராளமான போலீஸôர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai