சுடச்சுட

  

  மருத்துவக் கழிவுகளைக் கொட்ட வந்த டிராக்டர் பறிமுதல் 

  By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகளை அரசுக் குப்பைக் கிடங்கில் கொட்ட வந்த டிராக்டரை நகராட்சி  ஊழியர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
  குரும்பாபேட்டில் உழவர்கரை நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு, புதுச்சேரி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை
  மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது. 
  அதேசமயம் இங்கு மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகள் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய மருத்துவ கழிவுகளைச் சட்டவிரோதமாக கிடங்கில் கொட்டுவதாக உழவர்கரை நகராட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  தகவலின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் வழுதாவூர் சாலையில் ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
  அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், 30 பெரிய கருப்பு பிளாஸ்டிக் பைகளில் நச்சுத் தன்மை வாய்ந்த மருத்துவக்
  கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் போலீஸார், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரித்தபோது, டிராக்டரில் இருந்த கழிவுகள்
  அரும்பார்த்தபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
  இது தொடர்பாக தனியார் மருத்துவமனை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 
  இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்  சம்பந்தப்பட்டவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி 5 ஆண்டுகள்  தண்டனை வழங்கி, மருத்துவமனைக்கு சீல் வைக்கவும் வாய்ப்புள்ளதாக நகராட்சி ஆணையர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai