சுடச்சுட

  

  கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 145ஆவது பிறந்த நாள் விழா புதுவையில் கொண்டாடப்பட்டது.
  பாரதி பூங்கா அருகே நிறுவப்பட்டுள்ள சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, பேரவைத் துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்ற
  செயலர் ஏ.ஜான்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
  இதேபோல, புதிய நீதிக்கட்சித் தலைவர் பொன்னுரங்கம், துளுவ வேளாளர் நலச் சங்க நிர்வாகி விசிசி.நாகராஜன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.
  நற்பணி மன்றம்: பாகூர் கொம்யூன் கீழ்பரிக்கல்பட்டு வஉசி மக்கள் நல நற்பணி மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 145-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  சுதந்திரப் போராட்டத்தின் போது வஉசி ஆற்றிய பணிகள், அவரால் கொண்டு வரப்பட்ட சுதேசி இயக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. 
  விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. மன்றப் பொறுப்பாளர்கள் திருநாவுக்கரசன், ராஜதேகர், விஜயகுமார், ஹரிஹரசுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai