சுடச்சுட

    

    அக்டோபர் முதல் வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும்

    By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் முதல் வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
     சட்டப்பேரவையில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
     புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் கோரியுள்ளனர். புதிய இடத்தை தேர்வு செய்து கட்ட வேண்டும் என்றனர். பல்வேறு மாநிலங்களில் சென்று சட்டப்
     பேரவை கட்டடங்களை பார்த்துள்ளேன். மத்திய உள்துறை, நிதி அமைச்சரை சந்தித்தபோது, புதுச்சேரிக்கும் சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட ரூ.500 கோடி நிதியை தர வேண்டும் என கோரியுள்ளேன்.
     எம்.எல்.ஏக்கள் ஊதியம் உயர்த்த நடவடிக்கை: சட்டப்
     பேரவை உறுப்பினர்கள் ஊதியம், படிகள் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு ஏற்கெனவே இதுதொடர்பாக கோப்பு அனுப்பப்பட்டது. பல மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். கர்நாடகம், தில்லி மாநில உறுப்பினர்களுக்கு தரப்படும் ஊதியம் குறித்தும் பேசியுள்ளோம். எம்.எல்.ஏக்களுக்கு ஊதியம், படிகள் உயர்த்தப்படும். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓய்வூதியத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுப்போம். நோய்வாய்ப்பட்டால் சிறப்பு சிகிச்சை தர கோரியுள்ளனர்.
     அவர்கள் இறந்து விட்டால் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பணம் ஒதுக்கப்படும்.
     ஓய்வூதியம் தொடர்பாக பேரவைத் தலைவர் கோப்பை அமைச்சரைவை பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பும்.
     எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தை சீரமைத்து, ஜெராக்ஸ், பேக்ஸ் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எல்.ஏக்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். பேரவை நூலகத்தை செப்பனிட நடவடிக்கை எடுப்போம்.
     காரைக்காலில் சட்டப்பேரவைக் கூட்டம்: மழைக்காலக் கூட்டத்தொடரை காரைக்காலில் நடத்த கோரியுள்ளனர். பேரவைத் தலைவரும், அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒப்புக் கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பேரவை குழுக்களுக்கான தலைவர்கள் நியமனத்தை சட்டப்படி செய்வோம்.
     மத்திய அரசு-மாநில அரசு இணைந்து செய்யும் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு முனைந்து செயல்படும். அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சியும் தரப்படும்.
     நீதிபதிகள் நியமனம்: நீதித்துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிதாக காங்கிரஸ் அரசு வந்தபின் மகளிர், முதியோர் பிரச்னைகளுக்காக நீதிமன்றங்களை அமைக்க தலைமை நீதிபதி ஒப்புதல் பெற கோரிக்கை வைத்துள்ளோம்.
     காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் ரூ.6.8 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
     தேர்தல்களை பிரச்னையின்றி நடத்திய தலைமை தேர்தல் அதிகாரி, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல காலி இடங்களை நிரப்ப ஒப்புதல் தரப்பட்டுள்ளது வாக்காளர் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.
     ரூ.1600 கோடி
     விற்பனை வரி இலக்கு: விற்பனை வரியை பொருத்தவரை 3 மாதங்களில் ரூ.135 கோடி விற்பனை வரி வந்துள்ளது. இனிமேல் ரூ.1600 கோடி விற்பனை வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     வியாபாரிகள் குறைகளை தீர்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
     அக்டோபர் முதல் வரிக்குறைப்பு: வரிகளை பெருக்க ஆலோசனை கூறி உள்ளனர். வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிச்சலுகைகள் தருகிறோம். வரியை அதிகமாக்கும் வாய்ப்பை உருவாக்கும்போது, சில பொருள்கள் விற்பனை அதிகரிக்க சலுகை தரப்பட்டுள்ளது. அக்டோபர் 2016-ல் இருந்து வரிக்
     குறைப்பு அமலுக்கு வரும்.
     வரி ஏய்ப்பு தொடர்பாக வியாபாரம் நடக்கும் இடங்களில் சோதனை செய்யப்படும்.
     வரிவசூல் நிலுவை: பெட்ரோல், கலால் வரி நிலுவைகள் வசூலிக்கப்படும். நீதிமன்றத்தில் 5 வழக்குகள் போட்டனர். பெட்ரோலிய விற்பனையாளர்கள் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. அரசுக்குச் சேர வேண்டிய தொகை பெட்ரோலுக்கு ரூ.188.4 கோடி, கலால் வரி சேர்த்து ரூ.269 கோடி வர வேண்டியுள்ளது. பிற மாநிலங்களில் சமாதான் திட்டம் உள்ளது. மத்திய அரசு அனுமதி பெற்று வரித்தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும். பல ஆண்டுகளாக கட்டாத அசல், வட்டியை பெற நடவடிக்கை எடுப்போம்.
     ஜிஎஸ்டி வரி விரைவில் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வரி இழப்பை தருவதாக கூறி உள்ளனர். நாம் வரிச் சலுகைகளை அதிகம் தந்தால், மத்தியில் இருந்து அதற்கான இழப்பை பெற முடியாது.
     தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் தந்து தொடங்க ஏற்பாடு செய்வோம். புதிய தொழிற்கொள்கை அறிமுகம் செய்யப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கி, மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.
     காவல்துறை: அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக உள்ளோம் எனக்கூறும் நிலையை அரசு உருவாக்கி உள்ளது. ஆலை அதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் நிலையை மாற்றி உள்ளோம். காவல்துறையில் நிறைய பிரச்னைகள் உள்ளன. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தாமதமாக கடந்த ஆட்சியில் இருந்தது.
     ரூ.1000 ரேஷன் படி: சட்டப்பேரவை தேர்தலின் போது பணிபுரிந்த காவல்
     துறையினருக்கு அதற்கான படிகள் தரப்படும். சலவைப்படி, ரேஷன் படி இந்த ஆண்டு முதல் ரூ.1000 வழங்கப்படும். ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை, ஏனாம், கரிக்கலாம்பாக்கம், தரியால்தப்பா, போக்குவரத்து காவல் நிலையத்துக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
     அரசு சார்பில் 103 கண்காணிப்பு கேமராக்களும், தனியார் பங்களிப்போடு 72 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. புதிய வாகனங்கள், வயர்லஸ் கருவிகள் வாங்கவும், நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை குடியிருப்புகள் சீரமைக்கப்படும். சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்தி, காவலர்களுக்கு உரிய பயிற்சி தரப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai