சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கு வசதி: பாஸ்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    By புதுச்சேரி  |   Published on : 07th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அரசு பொது மருத்துவனையில் சவக்கிடங்கு வசதியை செய்ய வேண்டும் என பாஸ்கர் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
     பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அதிமுக எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கர் பேசியது:
     புதுச்சேரியில் உயர்நீதிமன்றத்தின் கிளையை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்பார்கள். மாவட்ட ஆட்சியர்களாக தமிழ் பேசத் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்.
     புதுச்சேரி நீதிமன்றங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்படுகின்றனர். புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் முன்னுரிமை தர வேண்டும்.
     காவல்துறையில் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, போதுமான காவலர்கள் இல்லை.
     காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு தேவையான தொழிற்பயிற்சி, மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் முதிய நோயாளிகளுக்கு தனி சிகிச்சைப் பிரிவை உருவாக்க வேண்டும். இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சவக்கிடங்கு வசதியை செய்ய வேண்டும் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai