சுடச்சுட

  

  அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிப்பு: திமுக குற்றச்சாட்டு

  By புதுச்சேரி  |   Published on : 07th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என திமுக எம்.எல்.ஏ. சிவா புகார் கூறியுள்ளார்.
   பேரவையில் நேரமில்லா நேரத்தில் அவர் பேசியதாவது:
   அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பழைய மின்சாதன பொருள்கள் தான் இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் பல இடத்திலும் மோசமான சூழல் உள்ளது.
   பாஸ்கர் (அதிமுக): இரவு நாலரை மணி நேரம் மின்நியோகம் இல்லை. நகரப்பகுதியில் பாதிப்புக்காக ஏன் நிறுத்த வேண்டும்.
   அசனா (அதிமுக): காரைக்காலில் மின்சாரம் கேள்விக்குறியாக உள்ளது. தெரு விளக்கே எரியவில்லை. காரைக்காலில் இரவு நேரத்தில் மின்சாரத்
   துறையில் தொலைபேசியே எடுப்பதில்லை.
   அமைச்சர் கமலகண்ணன்: இன்சுலேட்டர் பழுதால் மின்தடை ஏற்பட்டது. மின்பாதை அறுந்து விழுந்தது. தற்போது சரி செய்துள்ளோம். உருளையன்பேட்டை, காலாப்பட்டிலும் பாதிப்பை ஒரே நாளில் சரி செய்துள்ளோம்.
   காரைக்கால், பாண்டியில் இருக்கிறது. அதிக மின்சாரம் செல்வதுதான் பிரச்னை. புதுச்சேரி மின்துறை மூலம் எதிர்கால பிரச்னைகளை கவனத்தில் கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai