சுடச்சுட

  

  இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: விஜயவேணி எம்.எல்.ஏ.

  By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணி வலியுறுத்தி உள்ளார்.
   பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் பேசியது:
   வையாபுரி மணிகண்டன்: முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும். விஸ்வநாத நகரில் நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும்.
   அமைச்சர் நமச்சிவாயம்: ஹட்கோ நிதிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் வந்தவுடன் நீர்தேக்கத் தொட்டி கட்டப்படும்.
   இரா.சிவா: கடற்கரையில் உள்ள நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்துகின்றனர். புதிதாக கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டல்களில் போர் போட முடியாது. ஆனால், குடிநீரை நீச்சல் குளத்துக்காக பயன்படுத்துகின்றனர்.
   அமைச்சர் நமச்சிவாயம்: இதுகுறித்து அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
   விஜயவேணி: அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
   அமைச்சர் கமலக்கண்ணன்: புதுச்சேரி அரசு கல்வி நிர்வாகத்தில் 1992-ம் ஆண்டு சட்டவிதிகளின்படி 1994-ம் ஆண்டு 19 இசை ஆசிரியர் பணிகளை நிரப்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1998-ம் ஆண்டு பணிக்கான விதிகள் மாற்றப்பட்டன.
   இதில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இசையில் பட்டயம் பெற்றவர்களை தகுதியானவர்களாக கருத தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
   தற்போது 45 இசை ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதை நிரப்பும் போது, முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai