Enable Javscript for better performance
காவிரியில் நீர் விடாததைக் கண்டித்து பேரவையில் அதிமுகவினர் வெளிநடப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில் நீர் விடாததைக் கண்டித்து பேரவையில் அதிமுகவினர் வெளிநடப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:19 AM  |   அ+அ அ-   |    |  

    காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அதிமுக எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
     தமிழகத்துக்கு நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக காரைக்காலுக்கு காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் 6 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும்.
     இந்நிலையில் தமிழகத்துக்கே காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து விட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அப்போது அதிமுக பேரவை குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநில அரசைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி வந்தனர்.
     அன்பழகன்: காவிரியில் நீர் திறக்காத கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், நீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
     முதல்வர் நாராயணசாமி: காவிரி கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு 6 டிஎம்சி நீரைப் பெற வேண்டும் என்பதில் புதுவை அரசு உறுதியாக உள்ளது. காரைக்கால் விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டுவோம். கேள்வி நேரம் முடிந்த பின் நாங்கள் இப்பிரச்னைக்கு பதில் தருவோம் என்றார்.
     இதில், திருப்தி அடையாத அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai