சுடச்சுட

  

  குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்படும்: அமைச்சர் ஷாஜஹான்

  By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   புதுச்சேரியில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எப்.ஷாஜஹான் பேரவையில் அறிவித்தார்.
   பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
   அன்பழகன் (அதிமுக): கடந்த 2013-ல் ஆட்டோ குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கே வரவில்லை.
   குறைந்தபட்ச கட்டண திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   ரயில்நிலையம், மருத்துவமனைகளில் தமிழகத்தில் பிரிபெய்ட் ஆட்டோ கட்டணம் உள்ளது. அதுபோன்ற நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். ஆட்டோ நலவாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. என்ன முடிவு எடுத்தீர்கள்.
   பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: உறுப்பினர் முதலில் தெளிவாக தனது கோரிக்கையை வைக்க வேண்டும்.
   அமைச்சர் ஷாஜஹான்: ஆட்டோ கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் அதிகம் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஓட்டுநர்களை அழைத்துப் பேசி உள்ளோம்.
   ஆட்டோ கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்போம். ரூ.40 குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தில் தரப்படும் ரூ.25 தான் கட்டணமாக நிர்ணயிக்கப்படும். 1.8 கி.மீ தூரத்துக்கு இக்கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
   இரா.சிவா (திமுக): ஆட்டோவில் மீட்டர் பொருத்துவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆட்டோ தொழிலாளர்களுக்கு புதுவையில் எந்தச் சலுகையும் இல்லை.
   அன்பழகன்: தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு செய்துள்ள சலுகைகளை செய்ய வேண்டும்.
   முதல்வர் நாராயணசாமி: ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
   அமைச்சர் ஷாஜஹான்: ஆட்டோ கட்டணம் ரூ.25 என குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்படும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai