சுடச்சுட

  

  குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி அலுவலகத்திலிருந்து கோப்புகளை எடுத்ததாக அதிமுக புகார்

  By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குற்றம் சாட்டப்பட்டுளள சுகாதாரத்துறை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் புகுந்து கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார் என அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் புகார் கூறினார்.
   பேரவையில் நேரமில்லா நேரத்தில் அவர் பேசியதாவது:
   மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் பணியில் விசாரணை முடியும் வரை இருக்கக்கூடாது என்று பேரவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
   பேரவையில் உத்தரவிட்ட அடுத்த நாளான சனிக்கிழமை அலுவலகத்துக்கு அதிகாரி சென்று கணினியில் தகவல்கள், கோப்புகள் எடுத்துச் சென்றுள்ளார். அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
   முதல்வர் நாராயணசாமி: யார் தவறு செய்தாலும் தப்ப முடியாது. அவர் மீது ஏற்கெனவே பல புகார்கள் வந்தன. புதுச்சேரியிலிருந்து மருந்து நிறுவனங்கள் செல்ல அந்த அதிகாரிதான் காரணம் என்பதால் விசாரணை ஒரு மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai