சுடச்சுட

    

    சேதாரப்பட்டில் தொழிற்பேட்டை தொடங்கப்படுமா?

    By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேதாரப்பட்டில் தொழிற்பேட்டை திட்டம் தொடங்கப்படுமா என பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

     சட்டப்பேரவை கேள்வி நேரத்தில்.. உறுப்பினர்கள் பேசியது:
     தீப்பாய்ந்தான் (காங்.): தொழிற்பேட்டைக்காக சேதாரப்பட்டில் 2000 ஏக்கருக்கு மேல் நிலம் எடுத்துள்ளனர். நிலம் தந்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு தரவில்லை.
     அங்கு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. வட இந்தியர்கள் தான் வேலை செய்கின்றனர். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்.
     அன்பழகன் (அதிமுக): ஏற்கெனவே காங்கிரஸ் அரசு 877 ஏக்கர் விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்காக எடுத்தனர். ஆனால் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு திட்டத்தை தடுத்து விட்டது. தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் கிராமத்தில் விவசாய நிலம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி திரும்பி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக தான் அந்நிலம் கையகப்படுத்தப்பட்டது. சேதாரப்பட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா
     அமைச்சர் ஷாஜஹான்: தொழிற்சாலைகள் வந்தவுடன் நிலம் தந்தவர்களுக்கு வேலை வாங்கித் தரப்படும். பொலிவுறு நகர திட்டத்துக்காக அந்நிலத்தை எடுக்க திட்டமிட்டனர்.
     நீதிமன்ற உத்தரவின்படி அரசு இழப்பீடு தரும்.
     முதல்வர் நாராயணசாமி: சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக எடுக்கப்பட்ட நிலம். மத்திய அரசு அதற்கு அப்போது அனுமதி தரவில்லை. இதற்கிடையே, தனியார்-அரசு தரப்பு இடையே வழக்கு இருந்தது. சேதாரப்பட்டில் தொழிற்பேட்டை திட்டம் செயல்படுத்தப்படும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai