சுடச்சுட

  

  பாப்ஸ்கோ நிறுவன முறைகேடு: விசாரணை அமைச்சர் கந்தசாமி தகவல்

  By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாப்ஸ்கோ நிறுவன முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
   பேரவையில் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
   அன்பழகன் (அதிமுக): கடந்த ஆண்டில் பாப்ஸ்கோவில் இருந்து ரூ.20 கோடி பாக்கி வைத்திருந்தனர். தற்போது மதுபானம், காய்கறி, பட்டாசு விநியோகம் செய்தோருக்கு ரூ.30 கோடி பாக்கியுள்ளதாக பாப்ஸ்கோ தரப்பில் தெரிவிக்கின்றனர்.
   பொருள்களை விற்ற பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ரூ.10 கோடி ஊதியம் தரப்போகிறீர்களா. என்ன செய்யப் போகிறோம். நல்ல நிர்வாகத்தை நடத்த வேண்டும். ஆயிரக்கணக்கான கோடி விற்று கொள்முதல் 17 மதுபானக்கடைகள் ரூ.4 கோடி வந்தது. தற்போது 25 கடைகள் ரூ.50 லட்சம் என்று காட்டினர். பல கோடி லாபம் வரவேண்டிய பாப்ஸ்கோவில் ரூ.40 கோடி சுரண்டி கொள்ளையடித்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
   அமைச்சர் கந்தசாமி: அரசு விசாரணை நடத்த தயாராக உள்ளது. 23 பார் வைத்து விட்டு பத்து மாதமாக சம்பளம் தரப்படவில்லை. கூட்டுறவுத் துறையில் நஷ்டம் தொடர்பாக கமிட்டி அமைக்க வேண்டும். இதற்கு எம்.எல்.ஏ. உதவ வேண்டும். இதுதொடர்பாக விசாரணை வைக்கப் போகிறோம். உடனடியாக சிபிஐ செல்ல வேண்டாம்.
   அமைச்சர் நமச்சிவாயம்: நல்ல பிரச்னை. தொடக்கத்திலேயே கேட்டிருக்கலாம். ஆரம்பத்திலேயே கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய ஊழல் வந்திருக்காது.
   அன்பழகன்: கடந்த ஆட்சியிலும் இப்பிரச்னை தொடர்பாக கேள்வி கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம். இந்த ஆண்டு ரூ.15 கோடி நஷ்டமாகியுள்ளது. உடனே விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்.
   அமைச்சர் கந்தசாமி: முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கவேண்டும்.
   அன்பழகன்: ஏஎஃப்டியில் உடன் விசாரணை வைத்தீர்கள். தலைமைச் செயலர் தலைமையில் விசாரிக்க வேண்டும்.
   பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாள்களுக்குள் விசாரணை அதிகாரி அறிவிக்கப்படுவார்.
   அன்பழகன்: ஆதாரம் இல்லாவிட்டால் நான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யத் தயார். ஊழலுக்கு துணைபோகிறீர்களா.
   ஆதராத்துடன் சொல்கிறோம். ஆண்டுதோரும் மக்கள் வரிப் பணம் விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கப்படுகிறது.
   முதல்வர் நாராயணசாமி: அமைச்சர் விசாரணை அதிகாரி குறித்து அறிவிப்பார். எங்கள் ஆட்சி அமைந்து 90 நாள்கள் ஆகிறது. முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்கிறார்கள். நாங்கள் ஊழலுக்கு துணை போகமாட்டோம். எவரையும் விட்டு வைக்க மாட்டோம். ரோடியர் ஆலை தொடர்பாக விசாரணை அறிவித்துள்ளோம்.
   வைத்திலிங்கம்: கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai