சுடச்சுட

  

  புதுவை முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை இரவு திடீரென புதுதில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் ஜான்குமார் எம்எல்ஏவும் சென்றுள்ளதால், நாராயணசாமி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
   புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
   எதிர்பாராத திருப்பமாக தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார்.
   முதல்வராக தேர்வான நாராயணசாமி, 6 மாதத்துக்குள் புதுச்சேரியிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றாக வேண்டும். இதனால், முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவார் என பேசப்பட்டது.
   புதுச்சேரியில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
   இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான்குமாருடன் புதுதில்லிக்கு திடீரென்று புறப்பட்டுச் சென்றார்.
   இதுதொடர்பாக, கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அழைப்பின் பேரில், இருவரும் சென்றுள்ளனர்.
   முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவது குறித்து, கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai