சுடச்சுட

  

  பேரவையில் அன்னை தெரசாவுக்கு உறுப்பினர்கள் புகழாரம்

  By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வை சிறப்பிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
   அப்போது அவர் பேசியதாவது: அன்னை தெரசாவுக்கு வாடிகனில் போப்பாண்டவர் புனிதர் பட்டம் வழங்கி உள்ளார். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
   போப்பாண்டவர் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கியது பொருத்தமானதாகும். நமது சட்டப்பேரவையிலும் இந்நிகழ்வை போற்ற வேண்டும்.
   ஜான்குமார்: அல்பேனியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த அன்னை தெரசா கொல்கத்தா நகரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனது சமூகசேவையை தொடர்ந்தார். ஆண்டுதோறும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
   அன்பழகன்: பல்வேறு தீண்டத்தகாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சேவை புரிந்து முன்னேற்றத்துக்கும் உதவி புரிந்தவர். அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.
   இரா.சிவா: அன்னை தெரசாவின் இயக்கங்களுக்கு அரசால் செய்யக்கூடிய உதவிகளை செய்ய வேண்டும்.
   லட்சுமி நாராயணன்: இந்தியாவிலே வந்து தங்கி, புதுச்சேரிக்கும் அன்னை தெரசா வந்து சென்றுள்ளார்.
   மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி இல்லத்துக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.
   சிவக்கொழுந்து: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வு, மிகவும் மகிழ்ச்சி தருவதாகும்.
   ஜெயமூர்த்தி: என்றும் அவரது தொண்டு மறக்க முடியாததாகும்.
   கீதா ஆனநதன்: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு புனிதர் தெரசா என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
   முதல்வர்: அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது பெயரால் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு புனிதர் தெரசா என்ற பெயர் மாற்றப்படும்.
   
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai