சுடச்சுட

  

  மணக்குள விநாயகர் கல்விக் குழும நிறுவனர் நினைவு நாள்

  By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கல்விக்குழும நிறுவனரும், அரசு தலைமைக் கொறடாவாக பதவி வகித்தவருமான என்.கேசவன் 5-ம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
   அவரது இல்லத்தில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி கலந்து கொண்டு கேசவன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
   கல்விக்குழுமத் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   இதேபோல, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி, சாஃப்ட்வேர் சொல்யூசன் கல்வி நிலையங்களிலும் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
   கல்லூரித் தலைவர் தனசேகரன், நிர்வாகிகள் சுகுமாறன், நாராயணசாமி, இயக்குநர் ராஜகோவிந்தன் ஆகியோர் கேசவன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   பல்வேறு கல்லூரி டீன்கள் ஆர்.என்.காக்னே, எம்.அமரநாதன், கார்த்திகேயன், மருத்துவக் கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி, துணைக் காணிப்பாளர் கிரிஜா பிரகாஷ், முதல்வர்கள் எஸ்.மலர்க்கண், செந்தில், காஞ்சனா, தனுசு, சுரேஷ் அன்பு, நளினி ராஜகோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai