சுடச்சுட

    

    மழைக்கால கூட்டத்தொடரை காரைக்காலில் நடத்த வேண்டும்: அதிமுக

    By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் மாவட்டத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரை அங்கு நடத்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
     பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது: காரைக்காலில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யவேண்டும். சட்டப்பேரவையின் அடுத்த மழைக்காலக் கூட்டத்தொடரை காரைக்காலில் நடத்த வேண்டும். அது காரைக்கால் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.
     நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு ஏதோ தீர்வு கண்டுள்ளது போல் தெரிகிறது. அப்பிரச்னையில் என்ன நடந்தது என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும்.
     புதுவையில் உயர்நீதிமன்ற கிளையைத் தொடங்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் புதுவை மாநிலத்தவருக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிதிச் சிக்கலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai