சுடச்சுட

  

  ஆட்டோ தொழிலாளர் நலவாரியம் முதல்வருக்கு ஏஐடியுசி நன்றி

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் நாராயணசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான், இதற்கு உதவிய எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா ஆகியோருக்கு புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் (ஏஐடியுசி) நன்றி தெரிவித்துள்ளது.
   அதன் மாநில தலைவர் கே.சேதுசெல்வம் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக தொழிற்சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும்.
   புதுவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் மீட்டர் பொருத்தி ஓட்ட தயாராக உள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கீழ்க்காணும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
   குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீ தூரத்துக்கு
   ரூ.40-ம் அதற்கு மேல் ரூ.20-ம் நிர்ணயிக்க வேண்டும், மீட்டர் போட்டு ஓட்டுவதற்கு ஏதுவாக தமிழக அரசு போல் ஜிபிஎஸ் மீட்டர் வழங்க வேண்டும்.
   சட்டவிரோத இருசக்கர வாகன வாடகை நிலையங்களை தடை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் சேதுசெல்வம்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai