சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பாகூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.தனவேலு வலியுறுத்தி உள்ளார்.
   பேரவையில் பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியது:
   தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி வரை உள்ளாட்சித்துறை மூலம் வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்தத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
   துôய்மை இந்தியா திட்டத்தை கிராமப்புறத்துக்குக் கொண்டு வரவேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மக்களுக்கான அதிகாரம் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் கிராமப்புறச் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
   பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தை நகராட்சியாக தகுதி உயர்த்த வேண்டும். சோரியாங்குப்பம், குருவிநத்தம், கடுவனுôர், பரிக்கல்பட்டு, மதிகிருஷ்ணாபுரம், கொரவள்ளிமேடு, மணப்பட்டு போன்ற கிராமங்களில் சாலை பழுதடைந்துள்ளது.
   இதனை சரிசெய்ய துறை அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி அதிக நிதி வழங்க வேண்டும். கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குப்பைகளை அள்ள 42 கிராமங்களுக்கு 4 டிராக்டர்களே உள்ளது. இதனை அதிகப்படுத்த வேண்டும்.
   மதிகிருஷ்ணாபுரம் பகுதியில் 40 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் 6 கிமீ சுற்றி சென்று தென்பெண்ணை ஆற்றின் கரையில் உடல்களை புதைக்கின்றனர்.
   இதனை தடுக்க இடம் தேர்வு செய்து சுடுகாடு அமைக்க வேண்டும். தொகுதியில் விநியோகமாகும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குழாய்களை அமைக்க வேண்டும்.
   கால்நடை மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லை. சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் மாணவ, மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் சைக்கிள், மழை அங்கி காலத்தோடு வழங்குவதில்லை.
   சலவைத் தொழிலாளர்கள், இசை வேளாளர் மற்றும் நாவிதர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai