சுடச்சுட

  

  "கரும்பு நிலுவைத்தொகை பெற்றுத்தர நடவடிக்கை'

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
   சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் பேசியது:
   அன்பழகன் (அதிமுக): சாகுபடி செய்யப்பட்ட 4,500 ஏக்கர் கரும்பு பயிரில், ஏக்கருக்கு பாதிக்கும் மேல் செவ்வழுகல் நோய் பாதித்து அழிந்துவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ரூ.15 கோடி கரும்பு நிலுவைத் தொகை தரப்படாமல் உள்ளது. விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தில் தரப்படுகிறது. விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தனர். காங்கிரஸ் அரசிலும் இதை வாக்குறுதியாக அளித்தனர்.
   அமைச்சர் கமலக்கண்ணன்: புதுச்சேரியில், பாரி ஆலை சார்பில் 7,500 ஏக்கர், கூட்டுறவு சர்க்கரை சார்பில் 2,800 ஏக்கர் பரப்பிலும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 300 ஏக்கர் பரப்பில் செவ்வழுகல் நோய் தாக்காத ரக கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இயற்கை உரங்கள் பயன்பாடு இல்லாததால் செவ்வழுகல் நோய் ஏற்படுகிறது. நோய் தாக்கிய பகுதிகளில் கரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கரும்பு ஆராய்ச்சி நிலைய ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக அரசு கவனத்துடன் செயல்படும். பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத்தரப்படும்.
   இரா.சிவா (திமுக): தேர்தல் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சீரான வெகுமதியை தர வேண்டும். தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் சேற்றில் சிக்கி இறந்த மீனவர் ஹரிதாஸ் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
   வையாபுரி மணிகண்டன்: இறந்த மீனவர் ஹரிதாஸ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு நிவாரணம் தர வேண்டும். அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்.
   ஜெயபால் (என்.ஆர். காங்): மீண்டும் பேனர் தடைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தகவல் வந்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
   அன்பழகன்: பேரவையில் திறந்தவெளி விளம்பரங்கள் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுகுறித்து பேரவையில் விவாதித்து விட்டு சட்டத்தை ரத்து செய்து விடுங்கள்.
   பேரவைத் தலைவர்: முதல்வர் வந்த பிறகு இதுகுறித்து முடிவு செய்யலாம்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai