சுடச்சுட

  

  தெருநாய்த் தொல்லை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய புதுவை அரசு முடிவு

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தெருநாய்கள் தொல்லை பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், புதுச்சேரி அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
   புதுச்சேரியில் பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை தொடர்பாக, சட்டப்பேரவையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து அன்பழகன் (அதிமுக) பேசியது:
   30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ள புதுச்சேரியில், கருத்தடை 5 சதவீதம் கூட செய்யப்படுவதில்லை. நாள்தோறும் 50 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், ரூ.44 லட்சம் கருத்தடைக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   வருகிற 14-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நாய்த் தொல்லை தொடர்பாக விசாரணை நடக்கிறது. அதில் புதுச்சேரியும் வாதியாக இணைய வேண்டும்.
   சிவா (திமுக): ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை செய்ய ரூ.1000 ஆகிறது. இதில் முறைகேடுகளும் நடக்கின்றன. இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
   லட்சுமிநாராயணன் (காங்): தெருநாய்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   கொறடா அனந்தராமன்: பன்றிகள், மாடுகள் தொல்லையும் உள்ளது. ஆலங்குப்பத்தில் நாய்கள் காப்பகம் உள்ளது. அங்கு நாய்களை கொண்டு சென்று பராமரிக்கலாம்.
   அமைச்சர் நமச்சிவாயம்: விலங்குகள் நல வாரியத்தில் வழிகாட்டுதல்கள் உள்ளன. நாய்த்தொல்லை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதுவை அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். மக்களுக்கு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த படக்காட்சியும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2,600 நாய்களுக்குத் தான் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முழுமையாக அரசு இதில் கவனம் செலுத்தும். நடைமுறை சிக்கல்களை களையவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai