Enable Javscript for better performance
படகிலிருந்து விழுந்த மீனவர் சடலமாக மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    படகிலிருந்து விழுந்த மீனவர் சடலமாக மீட்பு

    By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:05 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில், படகில் ஏற முயன்று கடலில் விழுந்த மீனவர் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.
     முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த மீனவர் ஹரிதாஸ் என்பவர் கடந்த திங்கள்கிழமை மீன்பிடி படகில் ஏற முயன்றபோது, நீரில் மூழ்கினார்.
     இந்த நிலையில் இரண்டு நாள்களாக கடலோரக் காவல்படையினர், தீயணைப்புத் துறையினர் அவரை தேடி வந்தனர்.
     இதில் அவரது உடல் கிடைக்காத நிலையில் புதன்கிழமை காலை ஹரிதாஸ் உடல் மீன்பிடி துறைமுகத்தில் மீட்கப்பட்டது. அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai