Enable Javscript for better performance
பூட்டிய வீடுகளில் 18 பவுன், பணம் திருட்டு: வெவ்வேறு இடங்களில் சம்பவம்- Dinamani

சுடச்சுட

    

    பூட்டிய வீடுகளில் 18 பவுன், பணம் திருட்டு: வெவ்வேறு இடங்களில் சம்பவம்

    By புதுச்சேரி  |   Published on : 08th September 2016 08:04 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியில் வெவ்வேறு பகுதிகளில், 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், ரூ.75ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் ராஜாராம் (47). தனியார் அரிசி மண்டியில் வேலை செய்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்கக் கதவை பூட்டிவிட்டு மனைவி மஞ்சுளா மற்றும் குடும்பத்தினருடன் தாழ்வாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
     அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் சிறிய பையில் இருந்த ரூ. 75 ஆயிரம் ரொக்க பணம், அதில் இருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
     இது பற்றி தகவலறிந்த திருபுவனை சப்இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     8 சவரன் நகைகள் திருட்டு: இதே போல் புதுச்சேரி மூலகுளம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மதியழகன் (54). கரூரைச் சேர்ந்த இவர் ரெட்டியார்பாளையத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
     சொந்த ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சில தினங்களுக்கு முன்பு மதியழகன் குடும்பத்துடன் கரூர் சென்றார்.
     2 நாட்களுக்கு கழித்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது 2 பீரோக்களும் திறக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன.
     ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     கோயில் உண்டியல் உடைப்பு: இதே போல, வாதானுôரில் உள்ள ஓசூர் அம்மன் ஆலயத்தில் புதன்கிழமை காலை வழக்கம் போல் அர்ச்சகர் கோயிலை திறக்க வந்தார். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியந்தது. இது பற்றி திருக்கனுôர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai