சுடச்சுட

  

  மாஹே நகராட்சியில் காலிப்பணியிடங்களை நிரப்ப எம்.எல்.ஏ. கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாஹே நகராட்சியில் காலியாக உள்ள 50 சதவீத பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என சுயேச்சை எம்.எல்.ஏ. பேராசிரியர் ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
   புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
   கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மாஹே நகராட்சியின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது.
   50 சதவீதம் ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்பாவிட்டால் நகராட்சி செயல்பாடுகளில் கடும் பாதிப்பு ஏற்படும்.
   எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியும் மாஹே நகராட்சி நிலுவை வைக்கப்பட்டுள்ளது. 2013-14-இல் ரூ.1 கோடிக்கு பதிலாக ரூ.17 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எந்த தொகையுமே ஒதுக்கவில்லை.
   மாஹே, பள்ளூரில் பேருந்து நிலையம் கட்டும் பணி இதுவரை நடைபெறவில்லை. இரு பகுதிகளிலும் நாள்தோறும் 200 பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையம் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
   பொதுப்பணித் துறை மூலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம், மீன்பிடித் துறை திட்டத்தை நடப்பாண்டே நிறைவேற்ற வேண்டும். குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் அலுவலகப் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாஹே கூட்டுறவு சங்கம் நலிவடைந்துள்ளது.
   இதை புனரமைக்க அரசு உதவ வேண்டும் என்றார் ராமச்சந்திரன்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai