சுடச்சுட

    

    முருங்கப்பாக்கம், தேங்காய்த்திட்டில் குடிநீர் தட்டுப்பாடு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. புகார்

    By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முருங்கப்பாக்கம், தேங்காய்த்திட்டு பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
     புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மானியக் கோரிக்கை விவாதத்தில் அவர் பேசியது:
     அரியாங்குப்பத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகள் மட்டுமே அள்ளப்படுகிறது. ஆனால் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படுவது இல்லை.
     சாலைகள் சுத்தம் செய்ய நவீன இயந்திரங்களை வாங்க வேண்டும். தெருநாய் மற்றும் பன்றி வளர்ப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம் அரியாங்குப்பம் மார்க்கெட், சமுதாய நலக்கூடங்களை சீரமைக்க வேண்டும். 1965ஆம் ஆண்டுக்கு கீழ் உள்ள பிறப்பு, இறப்பு ஆவணங்களை கணினிமயமாக்க வேண்டும்.
     நகராட்சி மற்றும் கொம்யூன் மூலம் திருமண பதிவு செய்யாத மக்களுக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
     பொதுப்பணித் துறை மூலம் அரியாங்குப்பம் கடலூர் சாலை அருகில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி செயல்பாட்டுக்கு வரவில்லை. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படவில்லை. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
     நீர்த்தேக்க தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
     அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிரெஞ்சு கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரியாங்குப்பத்தில் இரண்டு பழைய பாலங்களை செப்பனிட வேண்டும்.
     முருகங்கப்பாக்கம், தேங்காய்த்திட்டு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய போல்வெல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை கட்ட வேண்டும். சண்முகா நகரில் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகட்டி கொடுக்கப்பட வேண்டும். சமூக நலத்துறை மூலம் ஊனமுற்றோர் சான்றிதழ் தர வேண்டும். உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும். மூன்று சக்கர வாகனம் தரவேண்டும்.
     பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு மானியமாக ரூ. 5 வழங்க வேண்டும். அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். அதற்கானதொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai