சுடச்சுட

    

    வெளிமாநிலங்களில் படித்து விட்டு திரும்பும் புதுவை மாணவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்

    By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிமாநிலங்களில் பள்ளிகளில் படித்து விட்டு மீண்டும் புதுவை வரும் மாணவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் பேரவையில் தெரிவித்துள்ளார்.
     சட்டப்பேரவையில், புதன்கிழமை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியது:
     தமிழகத்தில் 7, 8, 9ஆம் வகுப்புகள் படித்த புதுச்சேரி மாணவர்கள் மீண்டும் இங்கு
     11-ஆம் வகுப்பு சேர முடியவில்லை. குடியுரிமை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளது.
     அமைச்சர் கமலக்கண்ணன்: தமிழகப் பகுதிகளில் படித்து விட்டு வரும் புதுவை மாணவர்களுக்கு 11-ஆம் வகுப்பில் சேர 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
     சிவா (திமுக): வெளிமாநிலங்களில் படித்து விட்டு மீண்டும் இங்கு பயில வந்தால், குடியுரிமைச் சான்றிதழ் தர மறுக்கின்றனர். இதுதொடர்பாக அரசாணை உள்ளதா?
     அமைச்சர் ஷாஜஹான்: வெளிமாநிலங்களில் படித்து விட்டு மீண்டும் புதுவையில் பள்ளிகளில் சேர வரும் புதுவை மாணவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல் குறித்து ஆய்வு செய்து தீர்க்கப்படும்.
     பாகூர் தனவேலு: பாகூரில் பிரதான சாலையை அடைய, அப்பகுதியைச் சேர்ந்த 28 குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 2 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. இதற்காக சிற்றுந்துகளை இயக்க வேண்டும்.
     அமைச்சர் ஷாஜஹான்: தேவையான பேருந்துகள் எத்தனை என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai