சுடச்சுட

    

    5 நாள்களுக்கு பிறகு பேரவைக்கு வந்த என்.ஆர். காங். உறுப்பினர்கள் வெளிநடப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐந்து நாள்களுக்குப் பிறகு சட்டப்பேரவைக்கு புதன்கிழமை வந்த என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள், பணிநீக்கப்பட்ட தினக்கூலி ஊழியர்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
     புதுச்சேரி பட்ஜெட் கடந்த 29-ஆம் தேதி, பேரவையில் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள், பணிநீக்கப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
     மேலும், இக்கோரிக்கை நிறைவேறினால்தான் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்போம் என அக்கட்சியின் கொறடா ஜெயபால் பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
     இந்த நிலையில் 5 நாள்களுக்குப் பிறகு பேரவைத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று புதன்கிழமை மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அக்கட்சித் தலைவர்
     ரங்கசாமி வரவில்லை. அசோக் ஆனந்து, ஜெயபால், சுகுமாறன், கோபிகா, சந்திரபிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பேரவைத் தொடங்கியதும், அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. எழுந்து அப்பாவிகளான 3ஆயிரம் இளைஞர்களை காங்கிரஸ் அரசு பணிநீக்கம் செய்து விட்டது. அவர்களை மீண்டும் பணி அமர்த்தாமல் ஏமாற்றி வருகிறது எனப் பேசினார்.
     இதற்கு கொறடா அனந்தராமன், அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பணம் வாங்கிக் கொண்டு இளைஞர்களை ஏமாற்றி பணி அமர்த்தினர். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றனர். பின்னர் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai