சுடச்சுட

  

  உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

  By DIN  |   Published on : 11th September 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல்வரிடம் மனு அளித்துள்ளது.
  இந்த மனுவை கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கே.முருகன், முத்தியால்பேட்டை தொகுதிச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் சனிக்கிழமை வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
  கடலில் மூழ்கி உயிரிழந்த சோலை நகரைச் சேர்ந்த ஹரிதாஸ் என்கிற முனுசாமி குடும்பத்துக்கு ரூ.5.75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மீனவ தொழிலாளர் சங்கமும் நன்றி தெரிவிக்கிறது.
  மேலும், ஹரிதாஸுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதான முதல் பெண் குழந்தை மாற்றுத் திறனாளியாக உள்ளது. இரண்டாவது ஆண் குழந்தை பிறந்து 30 நாள்களே ஆகின்றன. அவர்கள் குடும்பத்துக்கு வேறு எந்தவிதமான ஆதரவோ, வருவாயோ இல்லை. எனவே அவரது மனைவி பொன்னிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
  மேலும், உயிரிழக்கும் மீனவர் குடும்பத்துக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்திட வேண்டும். ஹரிதாஸ் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai