சுடச்சுட

    

    விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
    கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
    இதற்காக புதுச்சேரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து சனிக்கிழமை நன்றி தெரிவிக்கப்பட்டது.
    அப்போது புதுச்சேரி பிரதேச விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai