சுடச்சுட

  

  கடல் சாகசப் பயணம் முடித்து புதுவை திரும்பிய என்சிசி மாணவர்களை முதல்வர் நாராயணசாமி வரவேற்றார்.
  புதுச்சேரி என்சிசி தலைமையகம் சார்பில், இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கடல் சாகச பயணத்தில், இரண்டு கடற்படை அதிகாரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. என்சிசி அலுவலர், 5-ஆம் அணி என்சிசி பிரிவு, கடலூர், புனித ஜோசப் கல்லூரி, அண்ணாமலை பல்கலை. பொறியியல் கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரி, பொறையார் டிபிஎம்எல் கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் பங்கேற்றனர்.
  336 கடல் மைல் தொலைவு கொண்ட இந்தப் பயணத்தை, தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஆளுநர் கிரண்பேடி கடந்த 2ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
  கடலூர், பரங்கிப்பேட்டை, பழையார், தரங்கம்பாடி வழியாக நாகப்பட்டினம் வரை சென்ற இந்த என்சிசி குழுவினர், சனிக்கிழமை மாலை மீண்டும் புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு திரும்பினர். அவர்களை முதல்வர் நாராயணசாமி வரவேற்றார்.
  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்சிசி இயக்குநர் ஜெனரல் விஜேஷ்குமார் கர், என்சிசி தலைமையக கமாண்டர் கர்னல் எஸ்.கே. குப்தா, கமாண்டிங் அலுவலர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai