சுடச்சுட

  

  பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் நிகழ்ச்சி, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி, கைலாசநாதர் கோயிலிலிருந்து ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்த அலங்காரத்தில், சின்னக்கண்ணு செட்டித் தெருவில் உள்ள வாய்க்காலுக்கு சனிக்கிழமை காலை எழுந்தருளினர். பின்னர், அங்கு பிட்டுக்கு மண் சுமந்த வைபவத்தை விளக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
  இதைத்தொடர்ந்து, சுவாமியும், அம்பாளும் முக்கிய வீதிகளின் வழியே கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி செய்திருந்தார்.
  இதேபோல், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயிலிலும் பிட்டுக்கு மண் சுமந்த வைபவத்தை விளக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai