சுடச்சுட

  

  காரைக்கால் அம்மையார் கோயிலில் சனிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் சித்தர் சித்தானந்த சுவாமிகளின் குரு பூஜை விழாவையொட்டி, தனியார் அமைப்பு சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
  மண்டபத்தில் அலங்கரித்து வைத்திருந்த சித்தானந்தர் உருவப் படத்திற்கு, வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு.அசனா, முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
  சமபந்தி: அன்னதானம் வழங்கும் பணி ஒரு பிரிவில் நடந்துகொண்டிருந்தபோது, அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai