சுடச்சுட

  

  காரைக்கால் அருகே உள்ள அக்கரைவட்டத்தில் சித்தர் சித்தானந்த சுவாமிகளின் 102 -ஆவது மகா குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் கிராமத்தில், ஸ்ரீ சௌந்தரியவல்லி சமேத ஸ்ரீ சோமநாதர் கோயிலுக்கு எதிரில் உள்ள சித்தர் சித்தானந்த சுவாமிகளின் சமாதியில் ஆண்டுதோறும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் மகா குருபூஜை நடைபெறுகிறது.
  அதன்படி, நிகழாண்டு சனிக்கிழமை நடைபெற்ற குருபூஜை வழிபாட்டில் சித்தானந்தர் சமாதிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். முன்னதாக, திருமலைராஜனாற்றங்கரையில் இருந்து பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
  நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.எம்.சி.சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அக்கரைவட்டம் ஸ்ரீ சோமநாதசுவாமி கோயில் அறங்காவல் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai