சுடச்சுட

    

    புதுவை ஜிப்மர் செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை பட்டங்கள் வழங்கப்பட்டன.
    ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் செவிலியர் கல்வி மற்றும் துணை மருத்துவ அறிவியல் பிரிவுகளுக்கான 7-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்டமளிப்பு விழா தனியாக நடத்தப்பட்டது.
    இந்நிகழ்ச்சியில் பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பணுவியல் நிலைய இயக்குநர் பி.என். கங்காதர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். விழாவில் மொத்தம் 181 பேருக்கு இளங்கலை மற்றும் முதுகலை செவிலியர் கல்வி மற்றும் துணை மருத்துவ அறிவியல் பட்டங்கள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில் ஜிப்மர் மருத்துவமனை தலைவர் எம்.கே. பான், இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai