சுடச்சுட

  

  தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 இளைஞர்கள் புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு சைக்கிள் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினர்.
  உலக தற்கொலை தடுப்பு தினம் சனிக்கிழமை கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி, இளைஞர் உதவி எண் மற்றும் புதுச்சேரி சைக்கிள் விளையாட்டுக் கழகம் இணைந்து
  பொதுமக்களுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு (620 கி.மீ.) 50 மணி நேரத்தில் செல்லும் சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்தது.
  இந்த பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. சைக்கிள் பயணத்தை காவல்துறை எஸ்.பி. ரச்சனா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சைக்கிள் பயணத்தை பொறியியல் பட்டதாரியான கார்த்திக்ரூபன், தனியார் நிறுவன ஊழியர் வரதேசிகன், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வாணன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பயணம் குறித்து கார்த்திக்ரூபன் கூறியதாவது:
  தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக்காக புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளோம்.
  ஒரு நாளைக்கு 300 கி.மீ. தொலைவு வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 50 கி.மீக்கும் 5 நிமிடம் ஓய்வும், 200 கி.மீக்கு 30 நிமிட ஓய்வும் எடுத்துக் கொள்வோம் என்றார்.
  இந்தியாவின் குற்ற ஆவணப் பாதுகாப்பகத்தின் கணிப்பின்படி புதுச்சேரியில் ஒரு லட்சம் பேரில் 40 பேர் தற்கொலையால் உயிரிழக்கின்றனர். இது தேசிய விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகும். அந்த ஆய்வின் கணக்குப்படி 68 சதவீதம் தற்கொலை செய்து கொள்வோர் 14 வயது முதல் 35 வயது உடையவர்களாக உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 15 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai