சுடச்சுட

    

    தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு தேவை: டிஜிபி சுனில் குமார் கெளதம்

    By DIN  |   Published on : 11th September 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை என்று புதுவை காவல்துறை டிஜிபி சுனில்குமார் கெளதம் பேசினார்.
    புதுவை போக்குவரத்து காவல்துறையும், தாகூர் அரசு கலைக் கல்லூரியும் இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியை சனிக்கிழமை நடத்தின.
    இந்தப் போட்டிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டுள்ளனர்
    போட்டிகளை டிஜிபி சுனில் குமார் கெளதம் தொடங்கி வைத்துப் பேசியது:
    புதுவையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அமைதியான மக்கள் இங்கு உள்ளனர். ஆனால், சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    இதனை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
    இளைஞர்கள் மத்தியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தேவை. அதன் மூலம் பிறரின் உயிரையும் காக்கலாம். வேகமாக வாகனத்தில் சென்று கீழே விழுந்தால் அதை தாங்கும் பலம் மண்டை ஓட்டுக்கு இல்லை. அதனால் தலைக்கவசம் அணியவேண்டும்.
    தலைக்கவசம் அணிவதால் சுமையாக உள்ளது என்றும், தலைமுடி கலைந்துவிடுகிறது என்றும் கூறுகின்றனர்.
    மேலும், தலையில் வெப்பம் அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர்.
    வாழ்க்கையை விட தலைக்கவசம் சுமை இல்லை. தலைமுடியை விட முகமே முக்கியம். அதேபோல, தகனமேடையில் எரியும் போது ஏற்படும் வெப்பத்தைவிட தலைக்கவசத்தால் உருவாகும் வெப்பம் குறைவுதான் என்றார் டிஜிபி.
    போட்டிகளில் 3 பிரிவுகளில் வெற்றி பெறும் மொத்தம் 36 மாணவர்களுக்கு பரிசுகளும், தலைக்கவசமும் வழங்கப்படும்.
    இந்த நிகழ்ச்சியில் ஐஜி கண்ணன் ஜெகதீசன், எஸ்.பி.க்கள் வீர.பாலகிருஷ்ணன், ரச்சனா சிங், ஆய்வாளர்கள் பாபுஜி, மாறன், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai