சுடச்சுட

  

  காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதியில் அமைச்சர், எம்எல்ஏ ஆகியோர் நேரடியாக தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
  காரைக்காலில் 4-ஆவது வாரமாக கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பணி திருமலைராயன்பட்டினம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
  போலகம் அருகே சாலையோரங்களிலும், குளக் கரையிலும் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியை வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  அவருடன் நிரவி திருப்பட்டினம் தொகுகி எம்எல்ஏவும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன், சார்-ஆட்சியர் கே.கேசவன், சீனியர் எஸ்பி வி.ஜே.சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். குப்பை மற்றும் கழிவுநீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பு அகற்றப் பணியில் அமைச்சரும், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டனர்.
  அவர்களுடன் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான்அரேலியஸ் தலைமையில் துப்புரவுத் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
  அப்போது,மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், புதுச்சேரி மாநிலம் தூய்மையான பிரதேசமாக உருவெடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குப்பைகளை வேறு கிரகவாசிகள் வந்து கொட்டுவதில்லை. நாம்தான் கொட்டுகிறோம். எனவே, அதனை நாமேதான் அகற்ற வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai