சுடச்சுட

  

  புதுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,485 சமாதானமாகக்கூடிய குற்றவியல் வழக்குகளுக்கு சனிக்கிழமை தீர்வு காணப்பட்டது.
  இதுகுறித்து, புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான எம். ஜெய்ச்சந்திரன் வழிகாட்டுதல் படியும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
  தொடக்க விழாவில் புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவரும், புதுச்சேரி தலைமை நீதிபதியுமான கார்த்திகேயன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகக்கூடிய குற்றவியல் சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. தலைமை குற்றவியல் நடுவர் பத்மநாபன் தலைமையில் ஒரு அமர்வும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எல்.வீரநாத்ரான் தலைமையில் ஒரு அமர்வும் நடைபெற்றன. காரைக்கால், மாஹே, யேனாமிலும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
  மொத்தம் 2467 சமாதானமாகக்கூடிய குற்றவியல் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1485 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 35.8 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் புதுச்சேரி மின்துறை சார்பில்
  தனியார் தொழில் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில் ரூ.15 லட்சம் தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான காசோலையை அந்த நிறுவனம் மின்துறைக்கு வழங்கியது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai