Enable Javscript for better performance
மாணவர்களுடன் துப்புரவுப் பணி மேற்கொண்ட அமைச்சர், எம்.எல்.ஏ- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுடன் துப்புரவுப் பணி மேற்கொண்ட அமைச்சர், எம்.எல்.ஏ

    By DIN  |   Published on : 11th September 2016 12:25 AM  |   அ+அ அ-   |    |  

    திருமலைராயன்பட்டினம் பகுதியில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், எம்.எல்.ஏ. கீதாஆனந்தன் ஆகியோர், மாணவர்களுடன் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
    காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும், தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் மூலம் துப்புரவு விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
    அந்தவகையில், 4-ஆவது வாரமாக கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், திருமலைராயன்பட்டினம் பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
    இதையொட்டி, போலகம் அருகே சாலையோரங்களிலும், குளக்கரையிலும் குப்பைகள், கழிவுநீர் அகற்றும் பணியை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். அவருடன் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், சார்பு ஆட்சியர் கே.கேசவன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
    குப்பைகள் மற்றும் கழிவுநீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றப் பணியில் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டனர். அவர்களுடன் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான்அரேலியஸ் தலைமையில் துப்புரவுத் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். இப்பணி நிறைவில் பேசிய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், பொதுமக்களிடையே தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

     

    kattana sevai