சுடச்சுட

  

  ரோந்துப் படகு கட்டும் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

  By DIN  |   Published on : 11th September 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் அரசலாற்றில் காவல் துறையின் ரோந்துப் படகைக் கட்டி நிறுத்துவதற்கான தளம் (ஜெட்டி) கட்டுமானப் பணி பாதியில் முடங்கியுள்ளதால், அப்பணியை மீண்டும் தொடங்கி, விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் 12 மற்றும் 5 டன் எடையுள்ள ரோந்துப் படகுகள் இருந்தன. இதில் 12 டன் படகு பழுதாகி முடக்கப்பட்டுவிட்டது. 5 டன் எடையுள்ள ரோந்துப் படகு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
  இந்நிலையில், அரசலாற்றின் தென்கரையில் செயல்பட்டுவரும் கடலோரக் காவல் நிலையம் அருகே அரசலாற்றில், ரோந்துப் படகுகளை நிறுத்துவதற்கு ரூ.50 லட்சத்தில் தளம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இப் பணி 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய பணிகள் தொடராமல் நிறுத்தப்பட்டுள்ளன. போதிய நிதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
  இதற்கிடையில், மத்திய உள்துறையிடம் காரைக்காலுக்கு 12 டன் திறனுள்ள படகு ஒன்று கூடுதலாக கோரப்பட்டுள்ளது என காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன் அண்மையில் தெரிவித்தார். இந்த படகு வந்துவிட்டால், 2 படகுகள் கட்டுவதற்கு ஏற்ப தளம் தயாராக இருக்கவேண்டும். எனவே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்கி, ரோந்துப் படகு நிறுத்தும் தளத்தை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai