சுடச்சுட

  

  புதுச்சேரியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள், வேல்ராம்பட்டு ஏரி மற்றும் குருமாம்பேட் குப்பைக் கிடங்கு ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
  ஆளுநர் கிரண்பேடி துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் பகுதிக்குச் சென்று அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால்களை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  அப்போது தண்ணீர் தேங்கி நிற்காமல் உடனே வடிந்து செல்லுவதற்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
  அப்பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வேல்ராம்பட்டு ஏரிக்குச் சென்ற ஆளுநர் அங்கு நடைபெறும் வேலி அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது, ஏரியை சுற்றி வேலி அமைத்து அடுத்த மாதம் 2-ஆம் தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அருகில் உள்ள உழந்தை ஏரியை சீர்படுத்தி மழைநீரை தேக்க உத்தரவிட்டார்.
  அங்கு துலுக்கானத்தம்மன் கோயில் திடலுக்குச் சென்ற ஆளுநர் துப்புரவு பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர், குருமாம்பாபேட் குப்பை கிடங்குக்குச் சென்ற அவர், அங்கு தினசரி குப்பையை தேக்கி வைக்காமல் உடனுக்குடன் அகற்றுவதற்கான புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
  ஆய்வின் போது தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன், வனத்துறை அதிகாரி குமார், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகர், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai