சுடச்சுட

    

    புதுவை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். திருச்சியைச் சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்து பெரிய மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு ஜனேஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை இருந்தது.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஜனேஷுக்கு வீட்டில் தோசை சாப்பிட கொடுத்தார்களாம். தோசை சாப்பிட்ட குழந்தை மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை ராஜீவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த ஒதியஞ்சாலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai