சுடச்சுட

    

    கடன் தள்ளுபடி: முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினர் நன்றி

    By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயக் கடன் ரூ.15.5 கோடியை தள்ளுபடி செய்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மற்றும் கூட்டுறவு, வேளாண் அமைச்சர்களுக்கு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
     புதுச்சேரி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் பெற்ற விவசாயக் கடன் ரூ.15.5 கோடி தள்ளுபடி மற்றும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் ஆகிய கோரிக்கைகளை ஏற்று சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் நாராயணசாமி, கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
     மேலும் காட்டேரிக்குப்பத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai