சுடச்சுட

  

  சட்டக்கல்லூரி விடுதி பயன்பாட்டுக்கு வராததால் ரூ.1.73 கோடி வீண்: சிஏஜி அறிக்கையில் தகவல்

  By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவியர் விடுதி பயன்பாட்டுக்கு வராததால் ரூ.1.73 கோடி வீணாகி உள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   புதுச்சேரி சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட, 2014-15ஆம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
   காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவியர் விடுதி ரூ.1.73 கோடியில் கட்டப்பட்டு, கடந்த 2008-ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த ஆண்டு ஜனவரியில் ரூ.14.9 லட்சம் செலவில் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.
   ஆனால், 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவியர் விடுதி திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் மாணவியர் விடுதி, தனியார் கட்டடத்தில் தொடர்ந்து இயங்கி வந்ததால், 2007 பிப்ரவரி முதல் 2015 ஆகஸ்ட் வரை ரூ.12.8 லட்சம் வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளது.
   மேலும், மாணவியர் விடுதி பயன்பாட்டுக்கு வராததால், பொருள்கள் சேதம், செல்லரிப்பு, குடிநீர் குழாய்கள் திருட்டு, கழிவறையில் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
   மேலும் கடந்த 2013-ஆம் ஆண்டு விடுதிக்கு என தனியாக துணை காப்பாளரை நியமிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரையும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் விடுதிக்கு என காப்பாளர், சமையலர், போன்ற பணியிடங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
   இதற்கு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள பதிலில், தேவையான பாதுகாப்பு, உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் மாணவிகள், விடுதியில் தங்க ஆர்வம் காண்பிக்கவில்லை. நகரப்பகுதியில் இருந்து தொலைதூரத்தில் உள்ளதாலும், காலாப்பட்டு சிறைக்காக ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டதால் செல்லிடப்பேசிகள் சரிவர இயங்காத நிலை ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
   காவல்துறை குடியிருப்புகள் இதே போல கிருமாம்பாக்கம் காவல்நிலையப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள் 3 ஆண்டுகள் ஆகியும் ஒப்படைக்கப்படாததால் ரூ.1.65 கோடி வீணாகி உள்ளது.
   புதுச்சேரி வீட்டுவசதி வாரியம் மூலம் 16 குடியிருப்புகள் கட்டப்பட்டன. கடந்த 2012-ம் ஆண்டு காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இக்குடியிருப்புகள் கட்டப்பட்டன. மூன்றாம் வகை குடியிருப்புகளில் தடயவியல் துறையினர் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டனர்.
   ஆனால், மீதமுள்ள இரண்டாம் தரத்தைச் சேர்ந்த 16 குடியிருப்புகளில் யாரும் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் 28 காவலர்கள் பணிபுரிந்தாலும் எவரும் குடியிருப்பில் குடியேறவில்லை.
   இதுகுறித்து சிஏஜி கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், பெரும்பாலான காவலர்கள் நகர் பகுதியில் இருந்து வருகின்றனர். எனவே, ஊரகப்பகுதியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் குடியேற தயக்கம் காண்பிக்கின்றனர். மேலும் அருகே உள்ள பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண புதிதாக ஆழ்துளை கிணறு போடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai