சுடச்சுட

  

  சிலைகள் கரைக்கப்பட்ட கடல் பகுதியில் நீரின் தன்மை ஆய்வு

  By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட கடல் பகுதியில் நீரின் தன்மை குறித்து மாசுக்கட்டுப்பாட்டுத் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
   சதுர்த்தி விழாவையொட்டி, புதுவையில், வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடந்த 9, 10 தேதிகளில் பழைய துறைமுகம் அருகே கடலில் கரைக்கப்பட்டன. இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் தமிழரசன், ஆனந்தன், சத்தியமுருகன் ஆகியோர், சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.
   இதுகுறித்து தமிழரசன் கூறுகையில், விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தூய்மையாக நீர் இருக்கும் போது ஒரு ஆய்வும், சிலைகள் கரைக்கப்படும் போது ஒரு முறையும், சிலைகள் கரைத்த பிறகு ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படுவதுண்டு. அப்போது, நீரில் ரசாயன கலவைகளால் மாசு ஏற்பட்டுள்ளதா, உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதா என்பதை அறிய மாதிரிகளை சேகரித்துள்ளோம்.
   இதுதொடர்பாக ஆய்வகத்தில் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் வாரியத்துக்கு அறிக்கையை அனுப்புவோம். மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தலால், தற்போது மரவள்ளிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளே வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு, கரைக்கப்பட்டுள்ளன.
   இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai