சுடச்சுட

  

  ஜிப்மரில் பாதுகாப்பு ஏற்பாடு: செப்.15இல் சிஐஎஸ்எப் ஆய்வு

  By புதுச்சேரி  |   Published on : 13th September 2016 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) அதிகாரிகள் குழு வரும் 15-ம் தேதி ஆய்வு மேற்கொள்கிறது.
   ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது 280 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 115 கண்காணிப்பு கேமராக்களுடன் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜிப்மரில் நடைமுறையில் உள்ளன.
   இந்த நிலையில் ஓய்வு பெற்ற இரண்டு காவல் துறை கண்காணிப்பாளர்களும் இதற்கான ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீனியர் சூப்பிரண்டன்ட் ராஜீவ் ரஞ்ஜன் மற்றும் கர்னல் விஜயராகவன் ஆகியோரைக் கொண்ட குழுவும் ஜிப்மர் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
   மேலும், இதனை மேம்படுத்தும் வகையில், தற்போது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையை ஜிப்மர் அணுகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடி நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஜிப்மரின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆராய சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஐவர் குழு வரும் 15ஆம் தேதி வருகிறது. சீனியர் கமாண்டன்ட் என்.ஸ்ரீதர் தலைமையிலான இக்குழுவில் சந்தோஷ் குமார், மாலிக், நிதானத் மற்றும் லம்பா ஆகியோர் உள்ளனர். ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா கூறுகையில், ஜிப்மருக்கு புதுவை காவல்துறை அளித்து வரும் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது. விரைவில் தனி தீயணைப்புப்படை நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai