சுடச்சுட

    

    தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கர்நாடக வங்கி முற்றுகை: 50 பேர் கைது

    By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, புதுச்சேரியில் கர்நாடக வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
     உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
     இந்தப் போராட்டத்தை விமர்சித்து, முகநூலில் பதிவிட்ட பெங்களூருவில் வசிக்கும் தமிழக இளைஞரை, கன்னட அமைப்பினர் சரமாரியாக தாக்கிய விடியோ பதிவு அண்மையில் வெளியாகி தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மாநிலத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
     இந்த நிலையில், புதுச்சேரி கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் தலைவர் உளவாய்க்கால் சந்திரசேகரன் தலைமையில், மிஷன் வீதியில் உள்ள கர்நாடக வங்கிக் கிளையை திங்கள்
     கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
     கர்நாடக அரசைக் கண்டித்து குரல் எழுப்பியதுடன், முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்தை எரித்தனர். இதில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஜெகநாதன், வீரமோகன், சுகுமாறன், அழகர், பாவாடைராயன், புரட்சிவேந்தன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
     தவாகவினர் 20 பேர் கைது
     இதனிடையே கர்நாடக வங்கியின் உள்ளே சென்று அங்கிருந்த ஊழியர்களை வெளியே மிரட்டி அனுப்பியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர் .
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai