Enable Javscript for better performance
தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    By புதுச்சேரி  |   Published on : 13th September 2016 09:36 AM  |   அ+அ அ-   |    |  

     புதுச்சேரியில், செவிலியர் பயிற்சி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை சார்பில் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை அருகிலிருந்து புறப்பட்ட பேரணியில் அரசு மற்றும் தனியார் செவிலியர் மற்றும் மருத்துவ துணைப்படிப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் அரசு பொது மருத்துவமனையை வந்தடைந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai