சுடச்சுட

  

  தொழில்பேட்டை குத்தகை நிலம்: அரசுக்கு அதிமுக எச்சரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 13th September 2016 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தொழில்பேட்டை குத்தகை நிலங்களை விற்க மாநில அரசு முயன்றால், மத்திய உள்துறையிடம் புகார் செய்யப்படும் என அதிமுக எச்சரித்துள்ளது.
   இதுகுறித்து சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுச்சேரியில் பிப்டிக், தொழில்துறைக்குச் சொந்தமாக தொழில்பேட்டைகளுக்கென பல பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
   இதில் போலகத்தைத் தவிர, பிற தொழிற்பேட்டைகளில் பல்வேறு தொழில்நிறுவனங்களுக்கு ஆலைகள் அமைக்க 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
   தற்போதைய காங்கிரஸ் அரசு திடீரென பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள நிலங்களை குத்தகை பெற்றவர்களுக்கே சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. யூனியன் பிரதேச சட்டத்தின்படி, புதுவையில் அரசு நிலங்களை விற்க மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. குத்தகை தான் விட முடியும்.
   யாரோ பயன்பெறுவதற்காக, குத்தகை நிலங்களை விற்க காங்கிரஸ் அரசு முயன்றால் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐயிடம் அதிமுக சார்பில் புகார் செய்யப்படும்.
   முந்தைய அரசின் தொழில்கொள்கையில் அறிவிக்கப்பட்ட அம்சங்களே தற்போதைய புதிய தொழில்கொள்கையிலும் உள்ளன. இதனால் எந்த பயனுமில்லை.
   நோனாங்குப்பம் படகு இல்லத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 ஊழியர்கள் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
   இப்பிரச்னையில் மாநில அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   ஏஎப்டி, பாப்ஸ்கோ, பிஆர்டிசி முறைகேடுகள் தொடர்பாக 3 விசாரணைக் குழுக்கள் கண்துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியாளர்களான என்.ஆர். காங்கிரஸாருடன் தற்போதைய காங்கிரஸ் அமைச்சர்களும், கட்சியினரும் தொடர்பில் தான் உள்ளனர் என்றார் அன்பழகன்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai